சபாரத்தினம் சபாநந்தன்
புலோலி மேற்கு, யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு: 06.08.1977
வீரச்சாவு: 14.10.1998
14.10.1998 அன்று கிளிநொச்சி மாவட்டம் ஆனையிறவுப் பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படைத்தளம் மீதான வேவு நடவடிக்கையின் போது சிறிலங்கா இராணுவத்துடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட வேவுப்புலி கப்டன் பிரசன்னா, கரும்புலி மேஜர் நிலவன் ஆகிய வேங்கைகளின் வீரவணக்க நாள் இன்றாகும்.
இரும்புக் கோட்டை எனவும் எவரும் நெருங்க முடியாது என்று எதிரி இறுமாப்பு கதைகள் பேசிக்கொண்டிருந்த மிக்கப்பெரும் படைத்தளம் தான் ஆனையிறவுப் படைத்தளம்.
ஆட்லறிகளின் பலத்தை தன்னகத்தே வைத்துக்கொண்டு அரக்கத்தனம் புரிந்து கொண்டிருந்தது இந்த படைத்தளம் எவரும் வந்து எதுவும் செய்ய முடியாது என்ற திமிர் எதிரியவனின் ஆனையிறவு படைத்தளத்திற்குள் பரவியிருந்தன.
ஆனையிறவு படைத்தளத்தில் குந்தியிருந்த இராணுவத்தினர் தமிழ் மக்களின் குடியிருப்புக்கள் மீது எறிகணைகளை ஏவி கோரத்தனம் ஆடினார்கள்.
இதைத் தாக்கியளித்து இதற்கான தாக்குதல் திட்டத்தை நடைமுறைப்படுத்த அந்த தளத்தில் இருந்த கட்டளை மையங்களையும், ஆட்லறித் தளங்களையும் பற்றிய தகவல் பெறுவதற்கு கரும்புலி மேஜர் நிலவன் தலைமையில் வேவு நடவடிக்கையில் அணி களம் இறக்கப்பட்டு செயலாற்றிக்கொண்டிருந்தார்கள்.
நீண்ட நாட்களாக சேகரித்து தகவலிலிருந்து முழுமையான திட்டங்களையும் தீட்டும் வண்ணம் அமையப்பெற்றது.
இறுதியாக அந்த ஆனையிறவு படைத்தளம் மீட்பதற்கான திட்டங்களை தீட்டுவதற்காக இறுதியான வேவு நடவடிக்கைக்கு செல்லும் போது அந்த படைத்தளத்தில் எதிரியுடன் ஏற்ப்பட்ட நேரடி மோதலில் வேவுப்புலி கப்டன் பிரசன்னா 14.10.1998 அன்று அந்த மண்ணில் தேசப்புயலாய் வீசி சென்றான். இவருடன் கரும்புலி மேஜர் நிலவனும் வீரச்சாவைத் தழுவிக்கொண்டான்.
தமிழீழ இலட்சிய கனவோடு பல வரலாற்று வெற்றிகளுக்கு வித்திட்டு புயலான தேசத்தின் புயல்.
விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
0 கருத்துகள்