Ad Code

Recent Posts

மேஜர் திலீப்பின் வீர வரலாற்று நினைவுகள்

மேஜர்  திலீப்

அழகுரத்தினம் விக்கினேஸ்வரன் 

கனகராஜன்குளம், ஓமந்தை, 

வவுனியா 

வீரப்பிறப்பு: 25.11.1969

வீரச்சாவு: 22.11.1990 


நிகழ்வு: முல்லைத்தீவு மாங்குளம் சிறிலங்கா படைமுகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு

   

சின்ன வீரன்


திலீப் சின்னப் போராளியாக இயக்கத்தில் இணைந்து கொண்டவன். உற்சாகமானவன்; எந்த வேலையையும் தானே ஓடி ஓடிச் செய்வான். சண்டையில் மிகவும் திறமையானவன்; சிறுவயதிலேயே போர்க்களத்திற்கு பழக்கமானவன்.


நல்ல குணங்கள் சில பேருக்கு இளமையிலேயே விதைக்கப்பட்டு விடுகிறது. அப்படிப்பட்ட ஒரு போராளிதான் திலீப்பும், தன் சக போராளிகளையும் தன் இன மக்களையும் மிகவும் நேசித்தவன். அமைதியான அவனது பேச்சும் நடத்தையும் எவரையுமே கவர்ந்து விடும். அதனால்தான் அவனில்லாத இந்த நாட்களிலும் அவனைப் பற்றிய நினைவுகள் எல்லா நெஞ்சங்களிலும் நிழலிடுகின்றன.'


இந்திய இராணுவத்தினரின் மிகக் செடு பிடியான காலகட்டங்களில் இவனது மிதிவண்டி, கிராமத்து ஒழுங்கைகளுடாக ஓடும். இராணுவத்தினர் பல முறை இவனை நோக்கிக் குறிவைத்தார்கள். ஆனாலும் திலீப் மறுபடியும் மறுபடியும் ஓடுவான். அவன் ஒடினால் தான் எங்களுக்குச் சாப்பாடு, வெடிமருந்து


காலம் ஓடியது அவனும் வளர்ந்தான் உயரமாக, ஒரு உன்னதமான போராளியாக. இந்தியப் படை வெளியேறியதுடன் எங்கள் படைமுகாம் ஒன்றுக்குப் பொறுப்பாளனாக நியமிக்கப்பட்டான். எங்கள் கண்முன்னாலேயே ஒரு சின்னப் போராளியாக மாறியவன் வளர்ந்து, பெரியவனாகி ஒரு தளபதியாக மாறி நின்றான்.


முதலாவது முறை மாங்குளம் இராணுவ முகாம் புலிகளால் தாக்கப்பட்டது. ஆனால் தாக்குதல் முழுமை பெறவில்லை. புலிகள் காவலரண்களை அமைத்து முற்றுகையிலீடு பட்டார்கள். அப்பொழுது திலீப் அக்காவலரண்களுக்கு இரண்டாவது பொறுப்பாளனாக இருந்தான். முகாமைக் காப்பாற்றுவதற்காக படையினரும், மக்களைக் காப்பதற்காகப் புலிகளும் கடுமையாகப் போரிட்டார்கள்.


தனது நாட்டின் விடுதலைக்காகவும், இறைமைக்காகவும் ஒவ்வொரு விடுதலை வீரனும் விதையாக விழுந்து கொண்டிருந்தான். போர் தொடர்ந்தது. சில நாட்களின் பின்பு, மாங்குளம் இராணுவ முகாமைச் சுற்றி முற்றுகையிலீடுபட்டிருந்த புலிகளுக்குப் பொறுப்பாளனாகத் திலீப் நியமிக்கப்பட்டான். 


வன்னியில் கனகராஜன் குளம் என்னும் கிராமத்தில் ஒரு ஓலைக் குடிசையில் பிறந்த திலிப் இன்று, வன்னிமண்ணை ஆக்கிரமித்து நின்ற ஒரு பெரிய படைமுகாமைச் சுற்றி வியூகம் அமைத்து, தன் தேசத்தைக் காக்கும் உண்மை மனிதனாக உயர்ந்து நின்றான்.


முற்றுகையின் முடிவு கார்த்திகை 22 ஆம் திகதி இரவு, மாங்குளம் இராணுவ முகாம் புலிகளால் தாக்கப்பட்டது. திலீப் ஒரு தாக்குதற் படைப்பிரிவிற்குத் தலைமை வகித்து - மடத்தடிப் பக்கமாகத் தாக்குதலில் ஈடுபட்டான்.


நித்தமும் சந்தித்த எதிரிகள் எங்கள் தோழர்களைப் பலிவாங்கிய எதிரியின் காவலரண்கள்...... வேதனைகளையும் துன்பத்தையும் விதைத்த அந்தக் காவலரண்களை நோக்கி, அவர்களின் அழிவுகளுக்கு முன்னே திலீப் முன்னேறினான்.


எதிரி முறியடிக்கப்பட்டான்; அவனது காவலரண்கள் கைப்பற்றப்பட்டன ஆனாலும் அந்த முயற்சியில் மேஜர் திலீப் வீரமரணத்தைத் தழுவிக்கொண்டான்.




விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Comments


 

Ad Code